ஐசிசி டெஸ்ட் போட்டியில் யாரு டாப் என்று வெளியீடு …!விராத் ,ஸ்மித் இதில் யாரு முதலிடம் …!விவரம் இதோ …!
இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஷ்வின் 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ரேங்கிங் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 912 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் 929 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்தில் உள்ளார். இந்திய அணியின் புஜாரா 810 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார்.
ரகானே, லோகேஷ் ராகுல் முறையே 18, 11வது இடத்திற்கு பின்தங்கியுள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் 803 புள்ளிகளுடன் 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ஆனாலும், ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் அஷ்வின் 2வது இடத்தில் நீடிக்கிறார். இவருடன் 2வது இடத்தில் உள்ள ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். அணிகள் பட்டியலில் இந்தியா 121 புள்ளிகளுடன் தொடர்ந்து நம்பர்-1 இடத்தை தக்க வைத்துள்ளது. தென் ஆப்ரிக்கா 117 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 102 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.