"ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்" இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

Default Image
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தாலும்கூட, டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க அடுத்துவரும் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான வெற்றி அவசியமாகிறது
வரும் 4-ம் தேதி தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றால் மட்டுமே தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைக்க முடியும். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால்கூட இந்திய அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்து 116 புள்ளிகளாக உயரும். ஆனால், மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் 2-0 என்று டெஸ்ட் தொடரை இழந்தால், 108 புள்ளிகளாக இந்திய அணி சரியும்.
அதேசமயம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தி, இந்திய அணியும் அதேநேரத்தில் தோல்வி அடைந்திருந்தால், முதலிடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கும். பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தத் தொடரில் இரு அணிகளும் பெறும் வெற்றி, தோல்வி அந்த அணிகளின் தரவரிசையை ஏற்ற இறக்கத்தைக் கொண்டுவரும்.
இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் இலங்கையைப் பின்னுக்கு தள்ளி 6-வது இடத்துக்கு முன்னேறும். ஒருவேளை ஆஸ்திரேலியா 1-0 என்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினால், தென் ஆப்பிரிக்காவைப் பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கும்.
பாகிஸ்தான் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் 97 புள்ளிகளுடன் இலங்கை அணியைப் பின்னுக்கு தள்ளி தரவரிசையில் முன்னேறும்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்