ஏங்க.? அங்க நான் என்ற பேச்சுக்கே இடமில்லை…ராக் பதிலளிக்கும் ரவிசாஸ்திரி

- அணியில் நான் என்பது இல்லை “நாங்கள்” மட்டுமே என்று ரவி சாஸ்திரி பெருமிதம்
- டி 20 உலகக்கோப்பையை வெல்வதே அணியின் இலட்சியம் என்று ரவி முழக்கம்
இது குறித்து பேசிய ரவிசாஸ்திரி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள 6 ஒருநாள் போட்டிகள் அனைதும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கான ஒரு ஆயத்தகளமாகவே பார்க்கப்படுகிறது.
டி20ல் உலகக்கோப்பையை அணி வெல்ல வேண்டும் என்பது மட்டுமே இப்போது எங்கள் மனதிலும், சிந்தனையிலும் இருக்கிறது. இதுவே எங்களுடைய லட்சியம் என்றும் மேலும் அவர் இந்திய அணி குறித்து பெருமிதம் தெரிவித்து பேசினார்.அதில் எங்களை பொறுத்தவரை “நான்” என்ற சொல் அகராதிலேயே கிடையாது. “நாங்கள்” என்ற சொல் மட்டுமே அணியில் உண்டு. காரணம் இந்திய அணி வெற்றி பெறும் அணி. அதனால் தான் ஒருவரின் சாதனைகளை மற்ற வீரர்கள் இங்கு கொண்டாடி மகிழ்கிறார்கள். வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சமீபத்தில் பெற்ற வெற்றியானது இந்திய அணியின் மன உறுதியை பிரதிபலிக்கிறது.மேலும் எந்த தருணத்திலும் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாட நம் அணி அஞ்சாது என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.