என்னுடைய தாடியை பத்தி பேசாம உங்களுக்கு பொழுது போகாதே!விராட் கோலி பதிலடி
இந்திய அணி கேப்டன் விராட் கோலி , என் தாடியை பற்றி அனைவரும் பேசுவது நல்ல பொழுப்போக்காக இருக்கிறது என்று ராகுல், உமேஷ்,சாகல் ஆகியோருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The talk around my beard is quite entertaining. @klrahul11, @buntysajdeh, @yuzi_chahal, @y_umesh it's popcorn time boys ???? #ViratBeardInsurance
— Virat Kohli (@imVkohli) June 9, 2018
இந்திய கிரிக்கெட் வீரரான லோகேஷ் ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது தாடியை காப்பீடு செய்துள்ளதாக கூறி, தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் விராட்கோலியின் தாடியை இருவர் அளவெடுப்பது போன்றும் பின்னர் கோப்புகளில் விராட் கோலி கையெழுத்திடுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
விராட் கோலி தாடியை பராமரிப்பதில் ஆர்வமுடையவர் என்பதை அறிவேன் என்றும், ஆனால் இந்த வீடியோவைப் பார்க்கும் போது கோலி தனது தாடியை காப்பீடு செய்ததாகத்தான் தோன்றுகிறது என்றும் லோகேஷ் ராகுல் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.