எனது மனைவி அனுஷ்கா சர்மா மாதிரி எல்லோரும் செய்ய வேண்டும்!அனுஷ்கா சர்மா செய்ததை வீடியோவோடு வெளியிட்ட விராட் கோலி!
இந்திய அணி கேப்டன் விராட் கோலி காரில் சென்று கொண்டு இருக்கும் போது சாலையில் குப்பையை வீசியவரை தனது மனைவி அனுஷ்கா சர்மா கோபமாக கேள்விக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆடி காரில் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசி சென்றிருக்கிறார். அதனை பார்த்த விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, “ஏன் குப்பையை சாலையில் வீசுகிறீர்கள்? ஏன் பிளாஸ்டிக்கை சாலையில் வீசுகிறீர்கள்?. இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். தயவுசெய்து குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுங்கள்” என்று கோபமாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்து விராட் கோலி, “பெரிய ஆடம்பரக் கார்களில் செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இதுபோன்ற செயல்களில் பெரிய கவனமில்லை. இவர்களால் எப்படி நாடு தூய்மையடையும்?. இதுபோன்ற தவறான செயல்களை நீங்கள் பார்த்தால் அனுஷ்கா சர்மா செய்தது போல் அவர்களிடம் தூய்மையை அறிவுறுத்துங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
https://twitter.com/imVkohli/status/1007952358310055937