இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்றது.முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் தோனி,தவான், புவனேஸ்வர் ,பூம்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதை தொடர்ந்து தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ராகுல் களமிறங்கினர். ஆனால் விராட் கோலி 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் அடித்துள்ளது.சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் தனது 5 வது அரை சதத்தை பதிவு செய்தார் .இதேபோல் இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 28 பந்துகளில் தனது 4 வது அரை சதத்தை பதிவு செய்தார்.
ராகுல் 70 ரன்களிலும், ரெய்னா 69,ரோகித் 0 ரன்களிலும், விக்கெட்டை பறிகொடுத்தனர்.பாண்டே 21 ரன்களுடனும்,பாண்டியா 9 பந்துகளில் 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி உதவியுடன் 32 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை இருந்தனர்.
அயர்லாந்து அணி பந்துவீச்சில் கெவின் 3 மற்றும் சாஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 70 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பந்துவீச்சில் சாஹால் மற்றும் குல்தீப் தலா 3 விக்கெட்டுகளும்,உமேஷ் 2 விக்கெட்டும்,பாண்டியா மற்றும் கவுல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.
நேற்றைய போட்டியின் முடிவில் நிருபர்களிடம் பேசிய விராட் கோஹ்லி, ‘இந்திய அணியில் எல்லாப் பக்கங்களிலும் வலிமையாக உள்ளது. எனக்கு இப்போது தேர்வு செய்ய ஒரு தலைவலி உள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரை, இந்திய அணி நன்றாகவே செய்திருக்கிறது. இது இந்திய அணிக்கு ஒரு பெரிய தருணம் என்று நான் நினைக்கிறேன். இளம் வீரர்கள் நன்றாக விளையாட சந்தோஷமாக இருக்கிறது.
மேலும், ‘நமக்கு எதிரி யார்? எனக்கு கவலை இல்லை.இங்கிலாந்திற்கும் அதே விஷயம் பொருந்தும் என நினைக்கிறேன். நாங்கள் எங்கள் சக்தி எதுவோ அதில் கவனமாக இருக்கின்றோம். இங்கிலாந்தின் மைதானங்கள் அனைத்தும் நிலையானவை. எனவே எங்கள் தாக்குதலை பேட்டிங்கை வைத்து தாங்குவோம். எங்களுக்கு 2 ரிஸ்ட் ஸ்பின்னர்கள்’. இங்கிலாந்து அணி நிலையான அணி. ஆனால் நாங்கள் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை, என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…