எனக்கு இந்த தண்டனை சரியானதுதான்…!வேறு எதுவும் எனக்கு வேண்டாம் …!கதறும் ஸ்மித் …!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்,தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
தாயகம் திரும்பிய ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாகவும், தங்களை மன்னிக்கும்படியும் கண்ணீர் விட்டனர்.குறுக்குவழியை கையாண்டதால் பெயர், புகழை இழந்ததுடன் தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்த ஊதியம், போனஸ், போட்டி கட்டணம், ஸ்பான்சர்ஷிப் இழப்பு, ஐ.பி.எல். தடை போன்றவற்றின் மூலம் ஏறக்குறைய தலா ரூ.30 கோடி வருவாயை இருவரும் பறிகொடுத்துள்ளனர்.
ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்து உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.