எந்தெந்த நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளது?இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்துள்ளது. இது தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தற்போது வரை குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கேராக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இதே இங்கிலாந்து அணி 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 444 ரன்கள் எடுத்தது தான் உள்ளது.
2006-ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி குவித்த 443 ரன்கள் தான் 3வது அதிகட்ச ரன்களாக இருக்கிறது. இதன் பின் தென்ஆப்ரிக்கா 439 ரன்களை ஒருமுறையும், 438 ரன்களை இரண்டு முறையும் எடுத்து பட்டியலில் முறையே 4, 5, மற்றும் 6வது இடங்களை பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அவர்களது அதிகபட்ச ஸ்கோர் 434 ரன்களாக உள்ளது.
இந்த பட்டியலில் இந்திய அணி 9வது இடத்தில் உள்ளது. 2011ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 418 ரன்கள் குவித்ததே இதுவரை இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.