எங்க நீ சிக்ஸ் அடிபாப்போம்..!ஓ..அடிக்கவே இல்லையா..!வெறுப்பேற்றுவதில் ஆஸ்.வீரர்களை மிஞ்சிய ரிஷப்…!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது.இதில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி வரலாறு படைத்தது.
அடிலெய்டு அக்ரோசமும் , பதற்றம் நிறைந்ததாகவே இருந்தது. என்றே சொல்லலாம்.இதில் வெறுப்பேற்றுவதில் பஞ்சமிருக்காது என்று ரசிகர்களின் எண்ணப்படியே அரங்கேறியது.வழக்கமாக ஆஸ்திரேலிய வீரர்கள் வெறுப்பேற்றுவதில் கைதேர்ந்தவர்கள் அவர்களையே வெறுப்பேற்றியுள்ளார்.
நம்ம ஊரு ஆளு ரிஷப் விக்கெட் கிப்பராக களமிரங்கிய ரிஷப் முதல்
இன்னிங்சில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். 2 வது இன்னிங்சில் தனது அதிரடியை காட்டிய ரிஷ்ப் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்கு பேட்டிங் கை கொடுக்கவில்லை என்றாலும் விக்கெட் கிப்பராக ஒரே நாளில் 11 கேட்ச்கள் பிடித்து அசத்தி உள்ளார்.
இதில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்க் செய்யும் போது அவர்களை மிஞ்சும் அளவிற்கு வெறுப்பேற்றியுள்ளார் ரிஷப். முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்.பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவைப் ரிஷப் எல்லாரும் எங்க புஜாரா மாதிரி ஆகிவிட முடியாது என்று கிண்டல் செய்து வெறுப்பேற்றினார்.இதை கேட்ட கவாஜா சுகம் சுட்டிபோனது.
ரிஷப்பின் இந்த வெறுப்பேற்றலுக்கும் காரணம் அவர் முதல் இன்னிங்சில் பேட்டிங்க் செய்யும் போது ஆஸ்.பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ்வம்புக்கு இழுத்தார் அதில் கடுப்பாகி போன ரிஷப் அதே பாணியில் கடைசி நேர ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியது.அப்போது பேட் செய்த அந்த அணியின் பந்து வீச்சாளர் கம்மின்ஸ் பார்த்து ரிஷப் கடுமையாக கிண்டல் அடித்து வெறுப்பேற்றினார்.நீ சில சிக்சர்களை விளாசு ப்பா..பாப்போம் ஓ…..இன்னும் நீ அடிக்கவே இல்லையா?, நீ இங்க விளையாடுறது ரொம்பக் கஷ்டம் என்று தன்னை வெறுப்பேற்றியவரை அவர் பாணியிலே வெறுப்பேற்றியுள்ளார்.
இந்த வெறுப்பேற்றலானது இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் வெறுப்பேத்திய ஆடியோவானது ஸ்டம்ப் அருகே பொறுத்தி வைக்கப்பட்டிருந்த மைக்கில் தெளிவாக பதிவானது.தற்போது இந்த காட்சிகள் சமுக வலைய தளங்களில் பரவி வருகிறது.