எங்களோட விதி…இப்படி ஒரு அவுட்_டா…வைரலாகும் வீடியோ..!!

Published by
Dinasuvadu desk

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ரன் அவுடான விதம் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியாவை 145 ரன்களுக்குள் சுருட்டி 137 ரன்கள் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்.3-வது நாள் ஆட்டத்தின்போது 3-விக்கெட் இழந்த நிலையில் 160 ரன்களை எடுத்து பாகிஸ்தான் ஆடிக்கொண்டிருந்தது. களத்தில் அசார் அலி மற்றும் சபீக் ஆகியோர் இருந்தனர்.அசார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்ததால் பாகிஸ்தான்  ரசிகர்கள் நிம்மதியாக இருந்தனர்.ஆனால் அந்த நிம்மதி அவர்களுக்கு சிறிது நேரம்கூட நிலைக்கவில்லை.
ஆஸ்திரேலிய பவுலர் பீட்டர் சிடில் பந்து வீச, அதனை ஸ்லிப்பில் கட் செய்த அசார் அலி அது பவுண்டரிக்கு சென்றுவிடும் என்று கூலாக இருந்தார். பந்து மெதுவாக உருண்டு சென்று பவுண்டரி லைனுக்கு முன்னால் நின்று கொண்டது.பந்து பவுண்டரியை கடந்து விட்டதாக எண்ணிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இருவரும் நடுக்களத்திற்கு வந்து பேசிக்கொண்டிருந்தார்கள.இதற்கிடையே பீல்டர் ஸ்டார்க் பந்தை எடுத்து கீப்பரை நோக்கி வீசினார். இதையடுத்து அசார் அலி ரன் அவுட்  செய்யப்பட்டார்.இதை சற்றும் எதிர்பாராத அவர் என்ன நடந்தது என்றே தெரியாமல் பரிதாபமாக பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

இந்த காட்சிகளை கண்ட  பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்தார்கள்.கிரிக்கெட் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு ரன் அவுட் நடப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

34 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

38 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

57 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago