ஊடுருவிய அரசியல்…..அதிகார துஷ்பிரயோகம்…!!!மித்தாலி ஒரங்கட்டப்பட்டதை போன்றே தோனிக்கும் நடந்ததா..??வெளியான தகவல்..!!
இந்திய மகளிரணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் து மிதாலி ராஜ் ஆனால் தற்போது கேப்டனாக இல்லை.அணியில் தொடர்ந்து விளையாடி மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை குவித்த ஒரே இந்திய கிரிக்கெட் விராங்கனை ஆவார்.இவர் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு அது சர்ச்சையாக வெடித்துள்ளது.அவ்வாறு அவர் நீக்கப்பட்டதைப் போலத்தான் இந்திய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் கேப்டன்ஷி கொடுக்கும் விவகாரத்திலும் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களின் அதிகார தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தாண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் (2018) கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர்-4 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். தோனி தலைமையில்களமிறங்கிய இந்தியாவின் 200-வது போட்டியில் அது ஆனால் இந்திய அணி போட்டியை டிரா செய்தது.ஆனால் அதற்கு முன்பே கடந்த 2017-ம் ஆண்டே ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக தோனி விலகிவிட்டார். அந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், இந்தியாவின் மற்றொரு வீரரான ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனிடையே அந்த தொடரில் ரோஹித் மற்றும்ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன்பிறகே தோனி இந்திய கேப்டனாக களமிறங்கினார்.
இதே போல தான் மகளிரணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் டி-20 அணியில் இருந்து நீக்கப்பட்டார்.இந்த நீக்கம் தொடர்பான அதிகார தலையீடு இருந்ததை நாட்டு மக்களே அறிந்து கொண்டனர்.இதே போல தான் தோனிக்கும் கேப்டன் பதவி கொடுக்கும் விவகாரத்தில் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களின் அதிகார தலையீடு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மகளிர் அணி தேர்வைப் போன்றே இந்திய ஆடவர் கிரிக்கெட் அணித் தேர்விலும் சில பேர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்தியா கிரிக்கெட் அணியின் முதிர்ச்சி பெற்ற இரண்டு கேப்டன்களும் ஒரங்கட்டப்பட்டது. ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
#MithaliRaj 's letter to BCCI has left everyone in shock! Absolutely angry and upset with the treatment Mithali Raj was given by the coach #rameshpowar What are your thoughts on this? pic.twitter.com/DxS5Fbh25F
— Female Cricket (@imfemalecricket) November 27, 2018