காலங்களும் காட்சிகளும் மாறும் என்பது கிரிக்கெட் உலகிற்கும் பொருந்தும். இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் இருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் போனதும் உண்டு. அப்படியே அரிதாக வாய்ப்புக் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறியவர்களும் உண்டு. சோபிக்காமல் போனவர்களும் உண்டு. சுடர்விட்டு பிரகாசித்ததை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமீபகாலமாக தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகும் இளம் வீரர்களின் எண்ணிக்கையும் வருகையும் அதிகரித்திருக்கிறது.
கடல் கடந்து…
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் 15 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் கடல் தாண்டியும் விளையாடி வருகிறார்கள். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், கனடா என வெளிநாடுகளிலும் சமீபகாலமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பிடிப்பது நாட்டிற்கு பெருமையாகும்.
தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணியில் இடம் பிடித்திருப்பவர் எஸ்.முத்துசாமி. இவரது முழுப் பெயர் சீனுராம் முத்துசாமி. 24 வயதாகும் இவர், பேட்டிங், பந்து வீச்சில் கலக்கும் ஆல்ரவுண்டர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் டர்பனில் வசிக்கிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் அணியில் சென்னையைச் சேர்ந்த ஜிவேஷன் பிள்ளையும் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் கணேசன் வேலை நிமித்தமாக 2012 ஆம் ஆண்டு ஜெர்மனியில் குடியேறினார். தற்போது அந்நாட்டு தேசிய அணியில் இடம் பிடித்த முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
கரீபியன் தீவுகளில்…
தமிழ்நாட்டைச் சேர்ந்த மகேந்திர வீரன் நாகமுத்து என்கிற மகேந்திர நாகமுத்து சிறந்த ‘ஆல்ரவுண்டராகவும்’ பெருமாள் சுழற்பந்து வீச்சாளராகவும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்கள். மேற்கிந்திய தீவுகளுக்கு ஆங்கிலேயர்களால் கூட்டம் கூட்டமாக கடல் மார்க்கமாக கடத்தப்பட்டனர். அப்படி சென்ற கூட்டங்களில் ஒருவரான ஆல்வின் காளிச்சரண் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கலக்கினார்.
கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நசிர் ஹூசைன் பின்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணியை வழிநடத்திச் சென்றார். இவர், சென்னையில் பிறந்தவர். ஆற்காடு நவாப் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை ஜாவித் ஹூசைன் தமிழ்நாடு அணி சார்பில் ரஞ்சிப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் குடும்பத்துடன் இங்கிலாந்திற்கு குடியேறிவிட்டார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் நமது அண்டை நாடான இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழர்கள் இடம் பிடிப்பது அரிதிலும் அரிதாகும். இதற்குக் காரணம், இலங்கையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டுப் போர்.
வசீகரிப்பு!
இந்தப் போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது, வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஆகும். இவை இரண்டும் தமிழர்கள் பெரும் பகுதியாக வசிக்கும் பகுதிகளாகும். இந்தப் போரின் போது வடக்கில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிழக்கு பகுதியைச் சார்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி ஆகிய மாவட்டங்களில் விளையாட்டுக் களத்தில் துள்ளிக் குதித்து ஓட வேண்டிய மாணவர்களும் இளைஞர்களும் போர்க்களத்திற்கு வசீகரிக்கப்பட்டனர். அதன் விளைவு அவர்களைத் தடம் மாறச் செய்தது. இதனால் விளையாட்டுத்துறையில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தேசிய அணியில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில், மத்திய மாகாணத் தலைநகர் கண்டியில் பிறந்த முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். சிவ சுப்ரமணியத்திற்கு அடுத்து இலங்கை அணியில் இடம்பிடித்த முதல் தமிழர் மட்டுமல்ல கிரிக்கெட் உலகின் பிதாமகன்களில் ஒருவருமாவார். இவரது பெற்றோர் திருச்சியை சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ரசல் பிரேம்குமார் அர்னால்ட். இலங்கை அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர். ஆனால் இவர் பிறந்தது கொழும்பு. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூசும் தமிழராவார். இவரது தந்தை டைரான் மேத்யூஸ், தாய் மோனிகா ஆகியோர் தூத்துக்குடியில் பிறந்தவர்கள். உள்நாட்டுப் போர் முடிவுக்கு பிறகு வடக்குப் பகுதியில் இருந்து இலங்கை அணிக்கு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் கல்லூரி மாணவர்கள் சிலோஜன் வேகப்பந்து வீச்சாளராகவும், ரிஷாந்த் ரியூட்டர் விக்கெட் கீப்பராகவும், மட்டக்களப்பு ஜெயசூரிய சஞ்ஜீவன் துவக்க வீரராகவும் மலேசியாவில் நடந்த ஒரு நாள் மற்றும் டி-20 சுற்றுப் போட்டிகளில் விளையாடினர். இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மூன்று தமிழர்களை தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும்.
உதவிக்கரம்…
அணி தேர்வுக்கு தலைவர் சனத் ஜெயசூரியா, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஆகிய இருவரும் விஜயராஜ்-க்கு பயிற்சியும் ஆலோசனைகளையும் வழங்கி தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று வாழ்த்தும் தெரிவித்தனர். இலங்கை அணிக்காக விளையாடினால் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் தமிழ் இளைஞன் இவராக இருப்பார்.
DINASUVADU
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…