உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!! 10 வருடங்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்த வீரர்!
2019 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆச்சருக்கு இடமில்லை.
மேலும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை கதிகலங்க வைத்த சாம் குரானுக்கும் இடமில்லை. ஆனால் கடைசியாக 2009இல் ஒருநாள் போட்டியில் ஆடிய ஜோ டென்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி :
இயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயின் அலி, ஆதில் ரஷீத், லியாம் பிளங்கெட், டாம் கரன், டேவிட் வில்லே, மார்க் உட்.