இவரோட அருமை உங்களுக்கு போகப் போகத்தான் தெரியும்…!முன்னணி வீரர் அதிரடி கருத்து
இந்திய டெஸ்ட் அணியின் வீரர் அஷ்வின் குறித்து, இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் திலீப் தோஷி கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.இரண்டிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.இரண்டாவது டெஸ்டில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
அஷ்வின் குறித்து, இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் திலீப் தோஷி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அஷ்வின் முன்பைவிட தற்போது நன்கு முதிர்ச்சியடைந்துள்ளார். சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள அஷ்வினின் தற்போதைய பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வினின் முக்கியத்துவம் தெரியவரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU