இலங்கை கிரிக்கெட் வாரிய பதவியை தூக்கி எரிந்த ஜெயவர்தனே, முரளிதரன்!
நாளுக்குநாள் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் மோசமடைந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. முரளிதரன், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முதலில் மகேலா ஜெயவர்தனேவை அணுகியது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரனை அணுகியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர அவரும் மறுத்துவிட்டார்.
தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் இலங்கை ஏற்கனவே கடந்த வாரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆலோசனைக் குழு முடிவு குறித்து முரளிதரன் கூறுகையில், ‘இந்த அழைப்பு நேர்மையற்றது, சூழ்ச்சி நிரம்பியது கிரிக்கெட் நிர்வாகம் கேவலமான ஒரு நிலையில் இருக்கும் போது எங்களைப் பயன்படுத்தப்பார்க்கிறது’, என கூறினார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில், ‘இந்த சிஸ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேரத்தை வீணடிக்க வேண்டாம், எங்களைப் பயன்படுத்த வேண்டாம்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.