இறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

Default Image

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வங்கதேத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.இதனால் கடந்த 6 ஆம் தேதி தொடக்கி தற்போது வரை நடைபெற்றுவந்தது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் மார்ச் 6ஆம் தேதி  தொடங்கியது. முதல் போட்டி இந்தியா- இலங்கை அணிகள் மோதியது.இதில் இந்திய அணியை இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்றது.

கடந்த 8ஆம் தேதி  இரண்டாவது டி-20-யில்  இந்திய அணி கொழும்பில் நடைபெற்ற வங்கதேசத்திற்க  18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10ஆம் தேதி பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் சேஸிங் செய்த அதிகபட்ச இலக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12ஆம் தேதி  இந்தியா – இலங்கை அணிகளிடையே  நடைபெற்ற போட்டியில்,  ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது.ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. இந்தியா 17.3 ஓவரில் 153 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் வென்ற இலங்கைக்கு இந்த வெற்றி மூலம் இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.

 

கடந்த 14ஆம் தேதி  நடைப்பெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் – தவான் ஜோடி நிதானமாக விளையாடினர்.

அவர்களது ஆட்டத்தை பார்க்கும்போது இந்திய அணி 130 -140 ரன்கள் தான் குவிக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ரோகித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல ஆடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தவான் 35 ரன்கள் எடுத்துதிருந்த போது ஆட்டமிழந்தார். தவான் விக்கெட்டையும் பறிகொடுக்கும் போது இந்திய அணி 9.5 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ரெய்னா அதிரடியாக விளையாடினார். இந்நிலையில் ரோகித் தனது அரைசத்தை பதிவு செய்தார். இதற்காக அவர் 42 பந்துகளை எடுத்துக்கொண்டார். பின்னர் அதிரடியாக விளையாடிய ரோகித் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து விளாசினார்.20ஓவர் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் 89 ரன்களும் ரெய்னா 47ரன்களும் குவித்தனர்.

அடுத்து களமிறிங்கிய பங்களாதேஷின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 27 ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க முஷ்ஃபிகுர் ரஹிம் அதிரடியாக 72 ரன்கள் குவித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால், 20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி ஆறு விக்கெட் இழப்பு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கடந்த 16 ஆம் தேதி போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் இலங்கை அணியை முலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டதை அடுத்து இலங்கை முதலில் களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெற 160 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேச அணி தமிம் இக்பால் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோர்களின் அபார ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு உறுதுணையாக மஹ்முதுல்லா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வங்கதேச அணி வெற்றி பெற்றதை இன்று  நடைபெறும் இறுதி போட்டிக்கு  இந்திய அணியுடன் மோத தகுதியானது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு நிதாஷா கோப்பை டி20-ல் இந்திய அணி வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த வங்கதேச அணி     ரன்கள்  அடித்தது.அதிக பட்சமாக ரன்கள் அடித்தார்.பின்னர் களமிறங்கிய    அணி ரன்களை அடித்தது.ஆட்ட நேர முடிவில் அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.இந்நிலையில் முதலாவது நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி  போட்டியில் இந்திய அணி  5 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி  போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான்  ஜோடி அடுத்து அடுத்து ஆட்டம் இழந்தனர்.அதன் பின்னர் களமிறங்கிய சபீர் ரஹ்மான் நிதானமாக விளையாடி 77(50) ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் அந்த அணி  20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  166 ரன்கள் எடுத்தது .சஹல் அதிக பட்சமாக 3 விக்கெட் எடுத்தார்.

பின்னர்  இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் – தவான் களமிறங்கினர் இருவரும் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தவான் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார் .அதன் பின் களமிறங்கிய ரெய்னா அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ருபெல் பந்தில் டக் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மா அரைசதம்:

அவரைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் ருபெல் பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து நஷ்முல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார்.மேலும் இது ரோஹித் சர்மாவின் 14வது டி20 அரைசதமாகும்.மனீஷ் பண்டே 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார் . விஜய் சங்கர் 17(19) ஆட்ட மிளக்க மற்றும் தினேஷ் கார்த்திக் 29(8) மற்றும் வாஷிங்டன் சுந்தர்  ஆட்டம் கடைசி ஒரு பந்து மிஞ்சிய நிலையில் 6 அடித்து இழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டனர் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்