இந்திய அணி மாற்றம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது..203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
இந்திய அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக பூம்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில் ”தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்த வரைக்கும் 38 டெஸ்டிலும் மாற்றம் என்பது மிகவும் ஓவர் . ஆனால், ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமானவர்கள். அதேபோல் ஒவ்வொரு அணியின் செயல்பாடும் வித்தியாசமானவை. இப்படி மாற்றுவது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். அதனால் மாற்ற விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
DINASUVADU
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…