இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இலங்கையின் இரு-கை பந்துவீச்சாளர் கமிந்து மின்டீஸ் இடம்பிடித்துள்ளார்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைப்பெற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் 27-ஆம் நாள் டி20 போட்டி நடைபெறுகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியலினை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இரு-கை பந்துவீச்சாளர் கமிந்து மின்டீஸ் இடம்பிடித்துள்ளார்.
U-19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணியின் தலைமை பொறுப்பு வகித்தவர் கமிந்து மின்டீஸ். சுழற்பந்து வீச்சாளரான இவர் தனது இரு-கைகளாலும் ஒத்த திறனுடன் பந்துவீசும் திறன் கொண்டவர்.
U-19 உலக கோப்பையின் போது தனது திறமையினை உலகிற்கு வெளிப்படுத்திய மின்டீஸ் தற்போது மூத்த அணியில் இடம்பிடித்துள்ளார். விரைவில் இவர் தனது திறமையினால் இலங்கை அணியின் முக்கிய வீரராக இடம்பிடித்து வலம் வருவார் என இங்கிலாந்து அணியின் மொயின் அலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…