இன்று தொடங்குகிறது இந்தியா -இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் !
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.
இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.அந்த போட்டி சமனில் முடிந்தது.
இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சை விட சுழல் பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.18 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட், ஷரதுல் தாகூர் மற்றும் கருண் நாயர் ஆகிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளார்.எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர் குமார் மற்றும் ரோஹித் ஷர்மாவிற்கு இடமளிக்கப்படவில்லை.
இங்கிலாந்து அணியும் சாதாரண அணி இல்லை .இந்திய அணிக்கு பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி கடும் நெருக்கடி அதிக வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பேட்டிங்கில் ரூட்,குக்,பைர்ஸ்டாவ் உட்பட பல வீரர்கள் உள்ளனர்.பந்துவீச்சில் ஆண்டெர்சன்,பிராட் உள்ளிட்ட வீரர்களும் உள்ளனர்.இதனால் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.
முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி :
- முரளி விஜய்
- ஷிகர் தவான்
- சேட்டேஷ்வர் புஜரா
- விராட்கோலி (கேப்டன்)
- அஜிங்கியா ரகானே(துணைக்கேப்டன்)
- லோகேஷ் ராகுல்
- ஹர்திக் பாண்ட்யா
- குல்தீப் யாதவ்
- உமேஷ் யாதவ்
- இஷாந்த் சர்மா
- கருன் நாயர்,
- ரிஷப் பாண்ட்,(கீப்பர்)
- ரவி அஸ்வின்,
- ரவிந்தர ஜடேஜா,
- முகமது சமீ,
- ஜஸ்ப்பிரிட் பும்ரா ,
- ஸ்ரதுல் தாகூர்,
- தினேஷ் கார்த்திக்(கீப்பர்)
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.