இன்று தொடங்குகிறது இந்தியா -இங்கிலாந்து முதலாவது 20-ஓவர் போட்டி!
அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.பின்னர் இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஓவர் ஆட்டம் இன்று தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.
இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகச்சிறப்பான ஒன்றாகும். இங்கிலாந்து அணியை பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் மற்றும் இந்திய அணி நன்றாக செயல்பட வேண்டும் என்றார்.
இந்தியா வீரர்கள் : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், டோனி, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா,தீபக் சாகர் , யுஸ்வேந்திர சாஹல், சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், க்ருனால் பாண்டியா , உமேஷ் யாதவ்.