இன்று இறுதிப்போட்டி..வெற்றி யாருக்கு..? இந்தியா-ஆஸ்திரேலியா பலபரீச்சை

Default Image
  • இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
  • சமநிலையில் இருக்கும் அணிகள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இருஅணிகளும் பலப்பரீச்சை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Related image

இதனை அடுத்து தொடர் யாருக்கு என்று தீர்மானிக்கின்ற மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதனாத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related image

இந்திய அணியின் தொடக்கவீரர்களாக களம் இறங்கும் ரோகித் சர்மா மற்றும் தவான் ஜோடி கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இன்றைய போட்டியில் களமிறங்குவார்களா? என்பது இன்று நடைபெறும் போட்டிக்கு முன்னரே தெரியவரும்.

இன்று போட்டி நடைபெறுகின்ற பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் அணிகள் தங்களது ரன்களை மழையாக பொழிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related image

இந்திய அணியை பொறுத்தவரையில் முதல் 4 பேட்ஸ்மேன்களும் அணிக்கு மிகப் பெரிய பலம் ஆக கருதப்படுகிறார்கள்.

Related image

பந்துவீச்சில் பும்ரா தனது பந்துவீச்சு மூலம் ஆட்டத்தை கட்டுப்படுத்துகிறது அதே போல குல்தீப் யாதவ், சமி ஆகியோரின் ஆட்டத்திற்கு தேவைப்படும் வகையில் அவ்வபோது விக்கெட்டுகளை வீழ்த்துவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

Related image

ஆனால் மிடில் ஆர்டரில் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்கள் வீழ்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவலாகவே உள்ளது. இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சற்று சொதப்பி வருவது, அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Related image

அதேபோல் எதிர்கொண்டு விளையாடும்  ஆஸ்திரேலியா தரப்பில் கடந்த போட்டியில் வார்னர் மற்றும் ஸ்மித்தின் விக்கெட் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் இன்றைய போட்டியில் இருவரும் விழிப்பாக விளையாடுவார்கள் மேலும் பந்து வீச்சில் சில மாற்றங்களோடு ஆஸ்திரேலியா களமிரங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related image

இன்றைய போட்டியில் இரு அணிகளும் தங்களது முழு ஆட்டத்தை வெளிப்படுத்தும் காரணம் இன்று நடைபெறும் போட்டியின் வெற்றி தான் தொடரை தீர்மானிக்கும் சமநிலையில் உள்ள இரு அணிகளும் தங்களது அதிரடிகளை காட்ட தவறாது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய போட்டி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்