இனி நிறைய டெஸ்ட் டி20-யில் செய்ய இருக்கிறோம்!விராட் கோலி

Published by
Venu

சுமார் இரண்டரை மாத சுற்றுப் பயணமாக  இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது.இரண்டு டி20 போட்டிகளில் இங்கிலாந்து தொடருக்கு முன்பு அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 208 ரன்கள் குவித்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Image result for virat kohli dhoni 20

வழக்கமாக 3-வது இடத்தில் இறங்கும் கோலி 6-வது வீரராக களம் இறங்கினார். அவர் இரண்டு பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

நாளை அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஆட்டம்  நடைபெறுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த நான்கு போட்டிகளிலும் ஏராளமான பரிசோதனை முயற்சிகளை செய்ய இருக்கிறோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘எதிரணிகளுக்கு ஆச்சர்யம் அளிக்க இருக்கிறோம். அதேபோல் மிடில் ஆர்டரில் மாற்றங்கள் செய்து  பார்க்க இருக்கிறோம். தொடக்க பேட்ஸ்மேன்களை தவிர்த்து மிடில் ஆர்டரில் ஏராளமான பரிசோதனைகளை செய்து பார்க்க இருக்கிறோம் என்று ஏற்கனவே நாங்கள் சொல்லியிருக்கிறோம். அடுத்த சில டி20-யில் தேவைக்கேற்ப வீரர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளோம்.

சூழ்நிலைக்கு ஏற்ப யாரை களம் இறக்குவது என்று பார்த்து, அதற்கேற்றபடி வீரர்களை களம் இறக்கி எதிரணிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம். இன்று மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தவர்களுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படாது. வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆனால், சர்வதேச போட்டியில் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது அவசியமானது’’ என்றார்.

Published by
Venu

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

12 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

13 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

15 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

16 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

16 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago