இனி என்னிடம் எதுவும் இல்லை …!என்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன் …!குக் உருக்கம்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தனது ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அலஸ்டர் குக் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.இவருக்கு வயது 33 ஆகும். இங்கிலாந்து அணியில் 2006ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக ஆடிவரும் குக், 159 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,225 ரன்களை குவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான குக் திணறிவருகிறார். முதல் போட்டியில் 13 ரன்களும் இரண்டாவது போட்டியில் 21 ரன்களும் மட்டுமே எடுத்தார். மூன்றாவது 46 ரன்கள் மற்றும் நான்காவது டெஸ்டில் 29 ரன்கள் என மொத்தமாகவே 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக் அறிவித்துள்ளார்.
ஓய்வுக்கு பின்னர் அலஸ்டர் குக் கூறுகையில்,என் வாழ்நாளில் இது ஒரு சோகமான நாள் ஆகும்.இது வரை என்னால் முடிந்ததை அணிக்கு கொடுத்துவிட்டேன்.இதற்கு மேலும் கொடுப்பதற்கு ஒன்னும் இல்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.
DINASUVADU