3 வது டெஸ்டிலும் இவர் அதிரடி நீக்கம்..!இந்திய அணிக்கு பின்னடைவு..!!கிரிக்கெட் வட்டாரம் கருத்து..!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கேப்டன் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய லெவன் மற்றும் இந்திய அணிகள் இடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
இந்த பயிற்சிப் ஆட்டத்தில் பவுண்டரி கோட்டிற்கு அருகில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய இளம்வீரர் பிரித்வி ஷா கேட்ச் பிடிக்க முயன்ற போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் அங்கேயே விழுந்தார்.இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 வார காலம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது நடந்து வரும் 2 வது டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி ஷா சேர்க்கப்படாத நிலையில் பாக்சிங் டேயானது டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்க உள்ள நிலையில் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்த நிலையில் அவர் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என ஐசிசி இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இதனால் தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக மயங் அகர்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களம் காண உள்ளார். இருந்தாலும் தொடக்கவீரர் பிரித்வி ஷா இல்லாதது சற்று இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.