இந்திய சிங்களை மிஞ்சிய பெண் சிங்கம்…!சர்வதேச அளவில் கர்ஜிக்கும் இந்திய சிங்கங்கள்..!!!!பலே பலே மார்தட்டும் மக்கள்..!!!

Default Image

இந்திய கிரிக்கெட் சிங்கள் சர்வதேச அளவில் கர்ஜிக்கின்றனர்.இந்திய சிங்களான விராட், ரோகித், மித்தாலி ராஜ் அதிரடியில் ஆடிபோய் உள்ளது கிரிக்கெட் வட்டாரம்.

மேற்கிந்திய தீவுகளில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்று  தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. பெண் சிங்கங்கள் இதற்கு முன் உள்ள போட்டிகளில் 2 லும் வெற்றி பெற்றனர்.

Related image

இந்த போட்டியில் கர்ஜித்த பெண் சிங்கம் மிதாலி ராஜின்  அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது.இந்த போட்டியின் மூலம் கிரிக்கெட் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி  ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்து எழுதியது.

Related image

இந்த ஆட்டத்தில் மற்ற சிங்கள் சற்று கர்ஜிக்க முடியாத நிலையில் இந்த சிங்கம் பொறுப்பாக தனது கர்ஜனையை வெளிப்படுத்தியது.இதில் இந்திய அணிக்கு பொறுப்பாக விளையாடிய மிதாலி ராஜ், 56 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உதவியுடன் 51 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மித்தாலி ராஜ் சர்வதேச டி-20 அரங்கில் ஒட்டுமொத்தமாக  2283 ரன்களை எடுத்தார்.இதில் அதிக ரன்கள் அடித்த மகளிர் வரிசையில் 4-வது இடத்தில் பிடித்தார்.

Related image

ஆனால் டி-20 அரங்கில்  இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரோஹித்  (2207) மற்றும் அதிரடி காட்டும் விராட் கோலி (2102) ஆகியோரை இந்த பெண் சிங்கம் (மிதாலி ராஜ்) 2283 முந்தினார். இதுமட்டுமா என்றால் இல்லை அதிக ரன்கள் அடித்த ஆடவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து வீரர் கப்டில்-ஐ (2271) பின்னுக்குத் தள்ளி தனது பேட்டிங்க் கர்ஜனையால் மிரட்டியுள்ளார் மித்தாலி.

Related image

மகளிர் டி-20 அதிர ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்:

1. சுஸீ பேட்ஸ் (நியூசிலாந்து) – 2996

2. ஸ்டீஃப்னி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்) – 2691

3. சார்லோட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) – 2605

4. மிதாலி ராஜ் (இந்தியா) – 2283

Related image

 

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்