இந்திய கிரிக்கெட்_க்கு பேராபத்து..சவுரவ் கங்குலி எச்சரிக்கை..!!

Default Image
தற்போதைய பிசிசிஐ நிர்வாகத்தின் கீழ் இந்திய கிரிக்கெட்டின் புகழுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இந்திய கேப்டனும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவருமான சவுரவ் கங்குலி எச்சரிக்கை மணி ஒலித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட விதம் முதல் ராகுல் ஜோஹ்ரியின் மீடூ பாலியல் சர்ச்சை வரை வெளிப்படையாக அதில் தெரிவித்துள்ளதகா ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட்டச்சூழ்நிலைமைகளை நடு சீசனில் மாற்றியது குறித்தும் சவுரவ் கங்குலி சாடியுள்ளார்.
ரவிசாஸ்திரியை பயிற்சியாளராகத் தேர்வு செய்த கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் கங்குலியும் உறுப்பினர்தான். கும்ப்ளேயை விராட் கோலிக்கு பிடிக்காமல் போன பிறகு ரவிசாஸ்திரி அவசரம் அவசரமாக கோச்சாக நியமிக்கப்பட்டார். ரவி சாஸ்திரி மனு செய்வதற்காகவே விண்ணப்பிப்பதற்கான இறுதிக் கெடு தள்ளி வைக்கப்பட்டது என்று கங்குலி சாடியுள்ளார்.
இது குறித்து சிந்தித்து முடிவெடுக்குமாறு கங்குலி கேப்டன் கோலிக்கு அவகாசமும் அறிவுரையும் வழங்கியுள்ள நிலையில் கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டியும், பிசிசிஐ-யும் ரவிசாஸ்திரியை கோச்சாக அறிவிக்கவே செய்து விட்டது. முதல் செய்தியாளர் குறிப்பில் ராகுல் திராவிட், பேட்டிங் ஆலோசகராகவும் ஜாகீர் கான் பவுலிங் ஆலோசகராகவும் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இருவருமே அந்தப் பணிக்கு அழைக்கப்படவில்லை.“ரவிசாஸ்திரி கோச்சாக தேர்வான விஷயத்தில் என் அனுபவம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகத்தான் இருந்தது” என்று தன் கடிதத்தில் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சில மாற்றங்கள் தன் விருப்பத்துக்கு மாறாக எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாகவும், நடு சீசனில் மாற்றங்கள் செய்வது இப்போதுதான் முதல் முறை என்றும் கங்குலி சாடியுள்ளார்.ராகுல் ஜோஹ்ரி மீது மீடு பாலியல் புகார் எழுப்பப்பட்ட விவகாரத்தில் அதை பிசிசிஐ கையாண்ட விதமும் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக கங்குலி தெரிவித்தார்.
“இந்திய கிரிக்கெட்டுக்கு இப்போது கிடைத்துள்ள புகழ் ஆண்டாண்டுகளாக கடின உழைப்பால் உருவாக்கப்பட்டதாகும். திறமைசாலியான நிர்வாகிகள், கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பு இதில் உள்ளது. இத்தகைய முறையில் கடினமாக கொண்டு வரப்பட்ட புகழுக்கு கிரிக்கெட் நிர்வாகத்தினால் கேடு வருவது எனக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் இதனை கவனிக்கிறார்கள் என்றே கருதுகிறேன்” இவ்வாறு கங்குலி தன் கவலைகளை வெளியிட்டுள்ளார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்