இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா மரணம்..!

Default Image

சவுராஷ்டிரா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மலுபா ஜடேஜா தனது சொந்த இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக நேற்றைய தினம் உயிர் இழந்தார்.

88 வயதாகும் மலுபா ஜடேஜா, வலது கை ஆட்டக்காரர். சவுராஷ்டிரா அணிக்காகவும், ரயில்வே அணிக்காகவும் ஆடியுள்ளார்.

இவர் 1945 முதல் 1964ம் ஆண்டு வரை முதல் தர கிரிக்கெட் போட்டிகள் ஆடியுள்ளார். 31 முதல் தர டெஸ்ட் போட்டிகள் ஆடிய இவர் 1373 ரன்கள் குவித்துள்ளார். இவரது மறைவிற்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவரது குடும்பதினர் கூறியதாவது, ஜடேஜா சில வருடங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். சில தினங்களாக மூச்சு திணறல் கோளாறுகள் இருந்தது. நேற்றைய இரவு உணவு அருந்திவிட்டு உறங்கியவர், காலையில் எழுந்திருக்க வில்லை. மருத்துவர்கள் அழைத்த பின்பு அவர் இறந்து விற்றார் என்பது தெரியவந்தது என கூறினார்.

இவரது பிரிவால் குடும்பங்களும் நெருங்கிய நண்பர்களும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சவுராஷ்டிரா அணி மேலாளர் கூறுகையில், கடந்த கால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஜடேஜாவும் ஒருவர். இவரின் மறைவு சவுராஷ்டிரா வாரியத்திற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம், இவரது குடும்பத்திற்கு திடமான மனநிலையை கொடுக்கவேண்டும் எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்