இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமியின் மனைவி மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச், இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மனைவி ஹசின் ஜகான் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மீது அவர் மனைவி ஹசின் ஜகான் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். சமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் அளித்த புகாரின்பேரில் மேற்குவங்கக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஹசின் ஜகான் இன்று கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.