இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியார் ரவி சாஸ்திரியுடன் காதலா…!உண்மையை உடைத்த பாலிவுட் நடிகை

Published by
Venu
பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியை  காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும்  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் பிசியான கால அட்டவணைகள் இருந்தபோதிலும், இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்வதற்கு நேரத்தை செலவழித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நிம்ரத் கவுர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இது கற்பனையான செய்தி என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் , இந்த செய்தி எங்கிருந்தது வந்தது என்று தெரியவில்லை. என்னை பற்றி வந்தது எல்லாம் கற்பனையானது. அந்த கற்பனை என்னை புண்படுத்தியது என்று கூறி உள்ளார்.
தற்போது வெப் சீரியல் ஒன்றில் நிம்ரத் கவுர்  நடித்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியுடன் ரவி சாஸ்திரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

9 mins ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

27 mins ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

28 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

39 mins ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

15 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

23 hours ago