இந்திய அணி படுதோல்வி எதிரொலி ..!வறுத்தெடுத்த முன்னாள் வீரர்கள்…!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இதனால், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
முன்னாள் வீரர்கள் பலரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறிதுகூட போராடமல் இந்திய அணி தோல்வியுற்றது அதிருப்தியை ஏற்படுத்தியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.
மேலும் இந்த தோல்விக்குப் பின்னர் நம்பிக்கை மற்றும் மன தைரியத்தோடு இந்திய அணி மீண்டு வரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார் .
இந்திய அணியின் முன்னாள் முகமது கைஃப் கூறுகையில் ,இந்திய அணியின் செயல்பாட்டை பார்த்த போது மி கவும் வேதனை அடைந்ததாகவும், தோல்வியில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU