நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆவர். இவர் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இடஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் அம்பேத்கர் என கூறியிருந்தார். இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.
இதனையடுத்து, டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ஹர்திக் பாண்ட்யாவின் கருத்து அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையிலும் அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் ஹர்திக் பாண்ட்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சையில் சிக்குவது பிசிசிஐக்கு பெரும் தலைவலியாக உள்ளது. முகமது ஷமி விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் தற்போது பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…