இந்திய அணிக்கு தொடரும் சோகம் ..!நட்சத்திர வீரருக்கு காயம் ..!முதலாவது டெஸ்ட் என்னவாகும் ?
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.
இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றது.ஆனால் இந்திய அணியில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் அஷ்வின் களமிறங்கவில்லை.இது குறித்து அணி நிர்வாகம் அளித்த தகவலில் வலை பயிற்சியின் போது அஷ்வினுக்கு சிறிது அளவில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .காயத்தின் அளவு பெரிதாக கூடாது என்பதற்காவே பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
முதலாவது டெஸ்டில் அஷ்வின் விளையாடுவார ?மாட்டாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.