மகளிர் கிரிக்கெட்டில் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து மட்டும் அல்லாமல் டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட், தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.இது குறித்து அவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு கூறியபோது, “நான் இப்போது விராட் கோலியின் பேட்டை பயன்படுத்துகிறேன்” என்றார்.
2014-ல் இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணி சென்ற போது டெர்பியில் வியாட்டும், கோலியும் சந்தித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உலகக்கோப்பை டி20-யில் விராட் கோலி அதிரடி 72 ரன்கள் எடுத்ததில் கவரப்பட்ட டேனி வியாட் அப்போது தன் ட்விட்டரில், “கோலி என்னைத் திருமணம் செய்து கொள்” என்று பதிவிட்டிருந்தார்.
இப்போது அதனை நினைவு கூர்ந்த டேனி வியாட், “ட்வீட் செய்த 10 நிமிடங்களுக்குப் பிறகு போனை எடுத்தால் ஆயிரக்கணக்கில் பேவரைட்கள், மறு ட்வீட்கள், இந்திய செய்திகளை இந்த ட்வீட் நிரப்பியிருந்தது. என் தந்தைக்கு மின்னஞ்சல்கள் வந்தன.
கோலி என்னைச் சந்தித்த போது, ‘ட்விட்டரில் இப்படியெல்லாம் செய்யக் கூடாது, அனைவரும் சீரியசாக எடுத்துக் கொள்வார்கள்’ என்றார். நான் சாரி என்றேன்.
நான் சதமெடுத்த பேட் உடைந்து விட்டது, இப்போது விராட் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவேன்” என்றார். முத்தரப்பு டி20 தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி மட்டை அவருக்காக ஆடுமா என்பதை இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனை டேனியல்லே வியாட் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், கோலிக்கு திருமணம் ஆன பின் முதல்முறையாக டேனியல்லே வியாட் இந்தியா வந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…