இந்தியா படுதோல்வி …!சிக்கலான சூழலில் சிறப்பாக செயல்பட்டது இங்கிலாந்து …!விராட் கோலி புகழாரம்

Published by
Venu

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட், இஷாந்த், ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்தை 246 ரன்னில் சுருட்டினார். இதனை தொடர்ந்து நேற்றைய 2ம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, மொயீன் அலியின் (5) பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது. இருப்பினும் புஜாராவின் 15-வது சதத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் சேர்ந்தது.

27 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் .இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.இந்நிலையில் இங்கிலாந்து அணி 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பட்லர் 69 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனையடுத்து இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் 58 ,ரகானே51 ரன்கள் அடித்தனர் .இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெடுக்களையும், ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து.

இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி  கூறுகையில், முந்தைய நாள் இரவில் இந்த டெஸ்டில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். ஆனால் நாங்கள் விரும்பிய மாதிரி தொடக்கம் கிடைக்கவில்லை. பந்து வீச்சில் அவர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். எல்லா பெருமையும் இங்கிலாந்து வீரர்களையே சாரும். கடினமான சூழலில் எங்களை விட இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டனர். 2-வது இன்னிங்சில் அவர்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago