இந்தியா- இங்கிலாந்து மோதும் 3வது 20 ஓவர் போட்டி இன்று ..!
2-வது இருபது ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிக பட்சமாக விராட் 47 ,தோனி 32,ரெய்னா 27 ரன்கள் அடித்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பிளாங்கெட் ,வில்லி ,ரஷித் ,பால் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹெய்லஸ் 58,பைர்ஸ்டோ 28 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.புவனேஸ்வர் ,பாண்டியா,சாகல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இதையடுத்து கடைசி இருபது ஓவர் போட்டி இன்று கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது.