இந்தியா-இங்கிலாந்து : டாஸ் ஜெயித்த இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது…!
இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பின்னர் கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.இந்த ஆட்டம் நட்டிங்கமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ச்சில் நடைபெறுகின்றது.
சமீபத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 5-0 என்ற கணக்கில் வைட்-வாஸ் செய்தது .இதனால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.இந்திய அணியை பார்க்கும் போது தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் நிலையில் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா அணி வீரர்கள் விவரம்:விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், தோனி,தினேஷ் கார்த்திக், ரெய்னா,ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ்,யுஸ்வேந்திர சாஹல், ஷ்ரேயஸ் ஐயர், சித்தார்த் கெளல், அக்ஸர் படேல் உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:இயான் மோர்கன் (கேப்டன்),ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ்,ஜோஸ் பட்லர், மொயீன் அலி,ஜோ ரூட், ஜேக் பால், டாம் கரன்,அலெக்ஸ் ஹேல்ஸ்,லியாம் பிளங்கெட்,பென் ஸ்டோக்ஸ், ஆதில் ரஷீத் டேவிட் வில்லி, மார்க் வுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று பௌலிங் ஐ தேர்வு செய்துள்ளார் இந்தியா அணி கேப்டன் விராட்.