இந்தியா ஆஸ்திரேலியாவை அடுத்து சுற்றுப்பயணம் எங்கே..?வெளியானது தகவல்..!!

Default Image

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு மூன்று டி-20 மற்றும் 4 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில்  டி-20 போட்டியானது சமனில் முடிந்த நிலையில்  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இதில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகள் உள்ளது.
சமனில் உள்ள இரு அணிகள் மோதுகின்ற  3வது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது மற்றும் 4வது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. இதன் பிறகு இரு அணிகளுக்கிடையே  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.  இந்நிலையில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா  தொடர் ஜனவரி 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை முடித்து அடுத்ததாக அப்படியே இந்தியா திரும்பாமல் ஆஸ்திரேலியாவில் இருந்து படியே நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்