இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. டி20 தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. 6-ந்தேதி 2-வது ஆட்டமும், 8-ந்தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.
ஜூலை 12-ந்தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. 2-வது ஆட்டம் 14-ந்தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.
அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. 1-ந்தேதி டெஸ்டும், 9-ந்தேதி 2-வது டெஸ்டும், 18-ந்தேதி 3-வது டெஸ்டும், 4-வது டெஸ்ட் 30-ந்தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 9-ந்தேதியும் தொடங்குகிறது.
ஐந்து டெஸ்டுகளும் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரைக்குள் 42 நாட்களில் நடக்கிறது. இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கடியான நிலையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர் முழுவதும் முழு ஃபிட் உடன் விளையாட வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ ஆண்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கவுன்ட்டி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய தோள்பட்டை காயம் பிரச்சனை இருந்து வருகிறது. என்னால் சிறந்த வழியில் அதை பார்த்துக் கொள்ள முடியும். நான் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற தோள்பட்டையை வலுவாக்குவது அவசியம்.
42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது. இது ஏராளமான வகையில் மன ஆழுத்தத்தை கொடுக்கும். இந்த அட்டவணையால் நான் லன்காஷைர் அணிக்கான சில போட்டிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…