கடந்த 14-ந்தேதி இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டே நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா தவான் (107), முரளி விஜய் (105) ஆகியோரின் சதத்தால் இந்தியா 474 ரன்கள் குவித்தது.
டி20 போட்டியில் மாயாஜால பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திய ரஷித் கானால் ‘ரெட்’ பந்தில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவருடன் முஜீப் உர் ரஹ்மானும் திணறினார். முஜீப் உர் ரஹ்மான் அறிமுக போட்டியில் 15 ஓவரில் 75 ரன்கள் விட்டுக்கொடுது ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவர்தான்.
ரஷித் கான் 34.5 ஓவர்கள் வீசி 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 35 ஓவரில் இரண்டு மெய்டன் ஓவர்கள் மட்டுமே வீசினார்.
அறிமுக போட்டியில் 154 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 1952-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அமிர் எலாஹி 134 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிக ரன்களாக இருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…