இந்தியாவிற்கு எதிரான ஒருநாள்,டி-20 தொடர் மேற்கிந்திய தீவு அணி அறிவிப்பு…!
கிங்ஸ்டன்:
2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 என மூன்று விதமான போட்டி களை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 21-ஆம் தேதி அன்றும்,3 போட்டி களைக் கொண்ட டி-20 தொடர் நவம்பர் 4-ஆம் தேதி அன்றும் தொடங்குகிறது.இந்த இரண்டு தொடருக்கான விண்டீஸ் கிரிக்கெட் அணி திங்களன்று அறிவிக்கப்பட்டது.
வீரர்கள் விவரம்:
ஒருநாள்:
ஜேசன் ஹோல்டர் (கேப்ட ன்),சுனில் ஆம்ப்ரிஸ்,தேவேந்திர பிஷூ,சிம்ரோன் ஹெட்மேயர், சாய் ஹோப்,அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ்,ஆஸ்லே நர்ஸ், கீமோ பால்,ரோவ்மான் பவல்,
கேமர் ரோச்,மார்லன் சாமுவேல்ஸ், ஃபாபியன் ஆலன், சந்தர்பால் ஹேம்ராஜ்,ஓஸ்னே தாமஸ்.
டி-20:
கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), ஃபாபியன் ஆலன்,டேரன் பிராவோ, சிம்ரோன் ஹெட்மேயர், எவின் லீவிஸ், ஒபேத் மெக்காய், ஆஸ்லே நர்ஸ், கீமோ பால்,காரே பிர்ரி, பொல்லார்ட், கீரன் பவல்,தினேஷ் ராம்டின், ஆந்த்ரே ரஸல், செர்பானே ரூதர்போர்டு, ஓஸ்னே தாமஸ்.
DINASUVADU