இந்தியாவிற்கு ஆப்பு வைக்க நினைத்த ஆஸ்திரேலியா….ஆப்பு வைத்த ஐசிசி..எதற்கு தெரியுமா..??

Default Image

மகளிருக்கான உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. கயானா நகரில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ‘பி’பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் இந்தியா மகளிரணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Image result for INDIA VS AUSTRALIA WORLD WOMEN T20 2018 BALL DELAY

 

கயாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்  அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் திணறினர்.இதனால் இந்த கூட்டணியை உடைக்க போட்டியின்போது ஆஸ்திரேலியா பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

Image result for INDIA -AUSTRILA WOMENST20

இந்நிலையில் ஆஸ்திரேலிய மகளிரணி அணி பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட ஒருஓவருக்கு நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டதாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில் தான் சாம்பவன் மற்றும் தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா இதனோடு தற்போது அபராதமும் கிடைத்தது.

Related image

கள மைதானத்தில் இருந்த 2 நடுவர்கள், 3-வது மற்றும் 4-வது என அனைத்து நடுவர்கள் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டனர் அந்த அறிக்கையின்படி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேக் லானிங்க்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20% அபராதமும்,  களத்தில் விளையாடிய மற்றவீராங்கனைகளுக்கு 10% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related image

மேலும் ஒரு அறிவுறுத்தலும் ஆஸ்திரேலியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி,இனி இதே போன்ற தவறை இந்த அணி 12 மாதங்களுக்குள் மீண்டும் செய்யும் பட்சத்தில் அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்