2011 உலகக்கோப்பையை தோனி படை வென்ற இதே நாளில் மகேந்திர சிங் தோனிக்கு இன்று (ஏப்ரல் 2)பத்மபூஷண் விருது அளித்து கவுரப்படுத்தியுள்ளனர்.
இது தற்செயலா அல்லது திட்டமிட்டு அவ்வாறு வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆம். இன்று ஏப்ரல் 2-ம் தேதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இதே நாளில் தோனி, நுவன் குலசேகராவை சிக்ஸ் அடித்து கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்தார்.