கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983 உலகக்கோப்பையை வென்ற அப்போது ‘கபில்ஸ் டெவில்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டது.
கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983 உலகக்கோப்பையை வென்ற அப்போது ‘கபில்ஸ் டெவில்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டது.
1983-க்குப் பிறகு 2003 உலகக்கோப்பையில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், கங்குலி, சேவாக் ஆகியோரது திகைப்பூட்டும் பேட்டிங்கினாலும் (குறிப்பாக சச்சின்), ஜாகீர் கான், ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ராவின் அதியற்புத பந்து வீச்சினாலும் இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இடையில் 2007 உலகக்கோப்பை படுதோல்வி ஒரு விழிப்புணர்வை தோற்றுவித்தது.
மீண்டும் உலகக்கோப்பையை இந்தியா எப்போது வெல்லும் என்று ரசிகர்கள் காத்திருந்து 28 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்றைய ஏப்ரல் 2-ம் தேதியில் அன்று தோனி படை இலங்கையை வீழ்த்த்தி உலக சாம்பியன்களானது இந்திய அணி.
கடைசி பந்தில் தோனி, நுவான் குலசேகராவை அடித்த அந்த மிகப்பெரிய சிக்ஸ் அதன் பிறகு மட்டையை வாள் போல் சுழற்றி அவர் கொண்டாடிய விதம் இந்திய ரசிகர்கள் மனதில் விட்டு நீங்கா இடம்பெற்ற ஒரு நிகழ்வாகும்.
1983-ல் விவ் ரிச்சர்ட்ஸ் எங்கு போட்டாலும் அடித்து நொறுக்கியபோது கபில்தேவ் எடுத்த கேட்சை மறக்க முடியுமா? அதுவும் கேட்சுக்கு ஓடி வந்த யஷ்பால் சர்மாவை கை காட்டி நிறுத்தி விட்டு நெருக்கடியில் அற்புதமான ரிச்சர்ட்ஸுக்கு கபில் எடுத்த அந்த கேட்ச் திருப்பு முனையானது. 38 ஆண்டுகள் கழித்து தோனி முன்னால் களமிறங்கிய உறுதிப்பாடு இன்னொரு சாதனை இரவானது
இலங்கை அணியும் 1996 சாதனைக்குப் பிறகு இன்னொரு உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு பெற்று மிக அருகில் வந்து தோனி படையினால் கனவு சிதைந்த நிலையில் இலங்கை திரும்பியது.
277 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்தியா 7 ஓவர்களுக்குள் சேவாக், சச்சினை இழந்தது. ஆனால் தோனி, கவுதம் கம்பீர் இணைந்து அனாயசமாக அலட்டிக் கொள்ளாமல் 109 ரன்களைச் சேர்த்தனர். தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் கம்பீர் 122 பந்துகளில் 97, உலகக்கோப்பை இறுதியில் சதம் எடுக்கும் அந்த ‘எலைட் கிளப்’பில் இடம் பிடிக்கும் வாய்ப்பை கம்பீர் நூலிழையில் தவற விட்டார். சச்சின் டெண்டுல்கர் ஆடும்போதே ஒரு உலகக்கோப்பையை வாங்கி விட வேண்டும் இதுதான் சச்சின் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்தவற்றுக்கு நாம் கொடுக்கும் பரிசு என்று தோனி படை களத்தில் இறங்கியதை நெகிழ்ச்சியுடன் சச்சின் டெண்டுல்கர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுவும் 2007 உலகக்கோப்பையில் படுதோல்வியடைந்து வெளியேறியபோது அந்த உலகக்கோப்பை தொடரே களையிழந்து சோபிக்காமல் போனது. அப்போதிலிருந்தே 2011 உலகக்கோப்பை கனவு இந்தியர்களிடையே வேரூன்றத் தொடங்கியது. அந்தக் கனவை தோனி தலைமையில் நினைவாக்கியது இந்திய அணி.
சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் இந்த வெற்றி தினம் பற்றி, “7 ஆண்டுகளுக்கு முன்பாக 15 இந்தியர்கள். ஒரு தென் ஆப்பிரிக்கர் (கேரி கர்ஸ்டன்), பில்லியன் மக்களுக்காக செய்து காட்டினர்.” என்று அந்தக் கணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவுகூரினார்.
விரேந்திர சேவாக்: ஆயுள் முழுதுக்குமான கணம். இதே நாளில் 7 ஆண்டுகளுக்கு முன்பாக பல கோடி மக்கள் மகிழ்ச்சியில் எழுச்சியுற்றனர். என்னவோர் இரவு! அந்த இரவில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
ஹர்பஜன் சிங்: 2011 உலகக்கோப்பை சாம்பியன்கள். என் வாழ்நாளில் சிறந்த தினம். நேசிக்கும் அனைவருக்கும் நன்றி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…