இங்கிலாந்து தொடரில் அம்பதி ராயுடு விளையாடுவதில் சிக்கல்-யோ-யோ சோதனையில் தோல்வி..!
இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும்.
இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர்.
இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராயுடு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.