இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் ஜோ ரூட் விக்கெட்டை கொண்டாடிய லோகேஷ் ராகுல்…!

Default Image

இந்தியகிரிக்கெட் அணி   வீரர் ராகுல் ரூட்டுக்கு பிடித்த கேட்சை சல்யூட் அடிப்பதுபோல் கொண்டாடினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 110-வது ஓவரில் இந்தியா தனது ஆட்டத்தினை டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தது.
இதன் பின்னர் இங்கிலாந்து அணி 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.
Image result for kl rahul celebration
இந்த போட்டியில் ஜஸ்ப்ரிட் பும்ரா 25-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை இங்கிலாந்து அணியின் கேப்டன்  ஜோ ரூட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டி விளிம்பில் பட்டு அசுர வேகத்தில் 2-வது ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுல் கைக்கு சென்றது.
ராகுல் சிறப்பாக அந்த  கேட்சை பிடித்தார். இந்த சந்தோசத்தை வலது கையை வைத்து சல்யூட் அடிப்பதுபோல் கொண்டாடினார். இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரரான டேல் அலி கோல் அடித்ததும் சல்யூட் அடித்து வெற்றியை கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்