இங்கிலாந்துடன் ஏற்ட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி வென்று 4-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,எங்கள் அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இது ஒன்னும் அவ்வளவு மோசம் இல்லை.பரவாயில்லை என்று தான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது.
ஆனால் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் மோசமாக தோற்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நன்றாக விளையாடியது. இதனால் இந்த தொடரில் கடும் போட்டி இருந்தது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த விளம்பரம் ஆகும்.இரண்டு அணிகளுமே வெற்றிக்காக விளையாடியதால் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்தார்கள்.
இங்கிலாந்து அணி தொழில் ரீதியாக பயமில்லாமல் ஆடியது. இரண்டு அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்து இருந்தனர். அவர்கள் போட்டியை டிரா செய்ய வேண்டும் என்ற வகையில் ஆடவில்லை.
இந்த தொடர் மூலம் இந்திய அணி நிறைய விஷயங்களை அறிந்துள்ளது . இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம்குர்ரான் சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு பெற்ற அலஸ்டர்குக் இங்கிலாந்தில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…