இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை அணி திணறல்….தோல்வியை தவிர்க்க போராட்டம்…!!

Published by
Dinasuvadu desk
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 290 ரன்களும், இலங்கை அணி 336 ரன்களும் எடுத்தன.46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 76 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் அன்றைய ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. பென் போக்ஸ் 51 ரன்னுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

 

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 5 ஓவருக்குள் இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து ஆடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 ரன்னில் தில்ருவான் பெரேரா பந்து வீச்சில் போல்டு ஆனார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 80.4 ஓவர்களில் 346 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பென் போக்ஸ் 65 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 124 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் குஷால் சில்வா 4 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 1 ரன்னிலும், குசல் மென்டிஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ், கருணாரத்னேவுடன் இணைந்தார். இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடி 4-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தது. ஸ்கோர் 103 ரன்னை எட்டிய போது தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே (57 ரன்கள்) அடில் ரஷித் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பென் போக்சால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரோஷன் சில்வா 37 ரன்னில் அவுட் ஆனார்.

நிலைத்து நின்று ஆடிய மேத்யூஸ் 137 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.ஆனார். அடுத்து களம் கண்ட தில்ருவான் பெரேரா 2 ரன்னில் ஜாக் லீச் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 65.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அத்துடன் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. டிக்வெல்லா 27 ரன்னுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இலங்கை அணி வெற்றிக்கு மேலும் 75 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் 3 விக்கெட்டுகள் உள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இன்றைய ஆட்டம் 15 நிமிடம் முன்னதாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியை தவிர்க்க இலங்கை அணி தொடர்ந்து போராடும். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago