ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவாகரம் விஷ்வரூபம் எடுத்தது. இதில் தொடர்புடைய டேவிட் வார்னருக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.
இதனால் சர்வதேச போட்டியிலும், ஐபிஎல் தொடரில் வார்னர் பங்கேற்கவில்லை. அதன்பிறகு வெளிநாட்டில் நடைபெறும் லீக்கிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகவும் குறைந்த லெவல் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.
சமீபத்தில் கனடா சென்று கனடா குளோபல் டி20 லீக் தொடரில் விளையாடினார். இந்நிலையில் இன்று முதன்முறையாக தடைக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் வார்னர் கலந்து கொண்டு விளையாடினார்.
டார்வினில் ஸ்ட்ரைக் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் சிட்டி சைகுளோன் அணிக்காக விளையாடி 32 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். ‘‘நான் இங்கு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறேன். அதை நான் விரும் செய்துகிறேன்’’ என்றார்.
Dinasuvadu.com
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…