ஆசிய கோப்பை விராட் கோலி அதிரடியாக வெளியேற்றம் …!ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ….!அணியில் யார் யாருக்கு இடம் ?
ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்து பயணம் சென்று இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது.இருபது ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியின் கைப்பற்றியது.தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இங்கிலாந்து அணி 2 டெஸ்டிலும் ,இந்திய அணி ஒரு டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றுள்ளது.நான்காவது டெஸ்ட் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் வரும் 15ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் இன்று தேர்ந்தெடுக்கப்படட்னர். இத்தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் புவனேஷ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம் :
ரோகித் சர்மா (கேப்டன் ),தவான் (துணை கேப்டன் ),ராகுல் ,ராயுடு,மணிஷ் பாண்டே ,கேதார் ஜாதவ்,தோனி,தினேஷ் ,ஹர்டிக் பாண்டியா,குல்தீப்,சாஹல்,அக்சார் படேல் ,புவனேஸ்வர் குமார்,பூம்ரா,சர்தால் தாகூர் ,கலீல் அஹமது.
Team India for Asia Cup, 2018 announced. Rohit Sharma set to lead the side in UAE #TeamIndia pic.twitter.com/mx6mF27a9K
— BCCI (@BCCI) September 1, 2018