மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி-20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது.
இதையடுத்து, 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 16.1 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 ஆசிய கோப்பை தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…